×

மீண்டும் தமிழகத்தில் இடைத்தேர்தல்: உண்மையான நிலவரம் என்ன?

தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிக பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் தேர்தலைச் சந்தித்த திமுக – அதிமுக கட்சிகளின் மக்கள் செல்வாக்கு இந்த தேர்தலின் மூலம் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது.
 

தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து நேற்று  தேர்தல் முடிவுகள் வெளியானது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிக பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் தேர்தலைச் சந்தித்த திமுக – அதிமுக கட்சிகளின் மக்கள் செல்வாக்கு இந்த தேர்தலின் மூலம் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. 

38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. கருணாநிதியின் அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்று திமுகவினர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு ஸ்டாலின் சாதித்து காட்டியுள்ளார் என்று அண்ணா அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.  

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் லட்சுமணன் உட்பட 15 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர்.  இதில் வசந்த குமார் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  தோற்கடித்துள்ளார். 

இருப்பினும் வசந்த குமார் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றவர். அதனால் தற்போது எம்.பியாக தேர்வாகி உள்ளதால் விரைவில் நாங்குநேரியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. இதன் மூலம் மீண்டும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அதே போல் பணம் பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும்  கூறப்படுகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்திருந்த நிலையில் தற்போது அதை ஈடுகட்டும்  விதமாக வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.