×

மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு: பசுக் காவலர் மகனுக்கு எம்பி சீட்

கமல் நாத் முதல்வர் பதவி ஏற்கும் வேளையில், அவர் சீக்கிய படுகொலைகளுடன் தொடர்புடையவர், அவருக்கு முதல்வர் பதவி வழங்கக்கூடாது என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர். மத்திய பிரதேசம், நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரம் மற்றும் விளம்பர பணிகளில் விரைவாக செயல்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மாநில முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல்
 

கமல் நாத் முதல்வர் பதவி ஏற்கும் வேளையில், அவர் சீக்கிய படுகொலைகளுடன் தொடர்புடையவர், அவருக்கு முதல்வர் பதவி வழங்கக்கூடாது என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய பிரதேசம், நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரம் மற்றும் விளம்பர பணிகளில் விரைவாக செயல்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மாநில முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத்க்கு எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல் நாத் மீது சமூக ஆர்வலர்கள் பல்வேறு புகார்களை வைத்துள்ளனர்.

கமல் நாத் முதல்வர் பதவி ஏற்கும் வேளையில், அவர் சீக்கிய படுகொலைகளுடன் தொடர்புடையவர், அவருக்கு முதல்வர் பதவி வழங்கக்கூடாது என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதையும் மீறி காங்கிரஸ் கட்சி  அவருக்கு முதல்வர் பதவியை வழங்கியது. முதல்வர் பதவியேற்ற கமல் நாத், முனைப்புடன் பசுப் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தார். பாஜக போலவே செயல்படுகிறது காங்கிரஸ் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது மகன் நகுல் நாத்க்கு சிந்த்வாரா தொகுதியில் எம்பி சீட் வழங்கியுள்ளது.

வாரிசு அரசியல் குறித்தும் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனம் இருக்கும் வேளையில், இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது.