×

மக்களவை தேர்தல் 2019 Live Updates; உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நிறைவு!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 779 ஆண்கள், 65 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 241 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை
 

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 779 ஆண்கள், 65 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 241 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் தொடங்கியது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி (இன்று) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பாதிவானது மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் VVPAT எனும் கருவி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமாவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை 06.00: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்தது.

மாலை 05.45: திண்டுக்கல் தொகுதி வேடச்சந்தூர்  பகுதியில் இருக்கும் ஆர்.எச்.காலனி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான காரணத்தால் இரவு 8 வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு

மாலை 05.36: தமிழகத்தில் 5 மணி வரை நிலவரப்படி மக்களவை தேர்தலில் 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 67.08 சதவீத வாக்குகள் பதிவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தகவல்

மாலை 05.00: கோவில்பட்டி அருகே வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்ததால் வாக்குவாதம், கைகலப்பு; மோதலில் அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்-வாக்குப்பதிவு நிறுத்தம்

மாலை 04.35: வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே மோதல் – காவல்துறையினர் தடியடி

மாலை 04.33: மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறும் நேரம் இது இல்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். இளைஞர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவாக உள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த நடிகர் வடிவேலு பேட்டி

மாலை 04.00: தமிழகத்தில் 3 மணி வரை நிலவரப்படி மக்களவை தேர்தலில் 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55.97 சதவீத வாக்குகள் பதிவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தகவல்

மதியம் 03.35: கர்நாடகாவில் வளைகாப்பு முடந்த கையேடு வாக்களித்த நிறைமாத கர்ப்பிணி; சக வாக்காளர்கள் நெகிழ்ச்சி

மதியம் 03.23: வாக்குப்பதிவு இடையில் நிறுத்தப்பட்டதால், புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு

மதியம் 03.20: வாக்குச்சாவடிகளை 3 மணிக்கு மேல் அதிமுக-வினர் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி-க்கு திமுக புகார். கண்காணிப்பு கேமிராக்களை செயலிழக்க செய்ய திட்டம் எனவும் புகார் மனுவில் திமுக குற்றச்சாட்டு

மதியம் 03.15: மதுரை செயின்ட் ஜோசப் பள்ளி அருகே வாக்களிக்க வந்த திமுக பகுதி செயலாளர் எம்.எஸ்.பாண்டியனுக்கு அரிவாள் வெட்டு; மர்ம கும்பல் வெட்டியால் படுகாயமடைந்த பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

மதியம் 03.00: பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

மதியம் 02.45: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்களர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம்

மதியம் 02.15: கடலூர் மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடியில், அமமுக வேட்பாளர் காசி.தங்கவேல் பெயருக்கு நேராக வாக்குப் பதிவு பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்

மதியம் 01.45: வாக்கு உங்கள் உரிமை; உங்கள் உரிமைக்காக போராடுங்கள் – வாக்களித்த பின் சிவகார்த்திகேயன் ட்வீட்

மதியம் 01.40: தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி மக்களவை தேர்தலில் 39.49 சதவீத வாக்குகள் பதிவு. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தகவல்

மதியம் 01.30: இதனை ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்ததால் வாக்களிக்க முடியாமல் இருந்த முதியவர் கன்னியப்பன் (85) முதல்முறையாக தனது வாக்கினை பதிவு செய்தார்.

மதியம் 01.00: கர்நாடக மாநிலத்தில் ஆர்வமுடன் வாக்களித்த முதியவர்கள்

நண்பகல் 12.50: தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

நண்பகல் 12.45: கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் 157 வார்டில் அஜின் என்ற வாக்காளரின் வாக்கை மர்ம நபர்கள் போட்டதால், ஏமாற்றமடைந்த அஜின், தனது வாக்கை திருமாறு வாக்குவாதம்

நண்பகல் 12.25: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார் நடிகை திரிஷா.

நண்பகல் 12.15: முதல் முறை வாக்காளர்களுக்கு எனது நன்றி. நல்லது நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது -கோடம்பாக்கத்தில் வாக்களித்த விஜய் சேதுபதி பேட்டி

நண்பகல் 12.10: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர்கள் ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.

நண்பகல் 12.00: மதுரை டி.வி.எஸ். நகர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்களித்தார்.

காலை 11.45: ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்-கவிஞர் வைரமுத்து வாக்களித்த பின்னர் ட்வீட்

காலை 11.39: தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

காலை 11.38: ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் முடிந்த கையேடு வாக்களித்த ஜோடி

காலை 11.35: தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்ல – சென்னை டி.நகர் ஹிந்தி பிரசார சபாவில் வாக்களித்த பின்னர் நடிகர் டி.ராஜேந்தர் பேட்டி

காலை 11.30: நீங்கள் இன்று வாக்களிக்கும் போது நியாய் திட்டத்துக்காக வாக்களிப்பதை நினைவில் கொள்ளுங்கள். நியாய் நமது வேலையில்லா இளைஞர்களுக்கானது, கஷ்டப்படும் நமது விவசாயிகளுக்கானது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால பாதிக்கப்பட்ட சிறு குறுந்தொழிலாளர்களுக்கானது, சாதி மற்றும் மத வேறுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கானது – காங்கிரஸ் தலைவர் ராகுல் ட்வீட்

காலை 11.25: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில், திருமணம் முடிந்த கையேடு வாக்களிக்க வந்த தம்பதி

காலை 11.20: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், லத்தூர் தொகுதியில் குடும்பத்துடன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் 105 வயது மூதாட்டி கவய்பாய் காம்ப்ளே

காலை 11.05: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் தனுஷ்

காலை 11.00: சேலம் வேடப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணன் மற்றும் ஈரோடு-சிவகிரி அரசு பள்ளியில் வாக்களித்த வந்த முதியவர் முருகேசன் ஆகிய இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடி வளாகத்திலேயே உயிரிழப்பு.

காலை 10.53: ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது அவர்களது கடமை, உரிமை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும்-திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

காலை 10.50: சென்னை சாலிகிராமத்தில் உள்ள உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

காலை 10.45: கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 10.30: தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.

காலை 10.15: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித்தார்.

காலை 10.00: மதுரை மக்களவை தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி என்ற பெயரில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் வீல் சேர் கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காலை 10.05: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் வாக்களித்தனர்

காலை 09.59: அசாம் (5) 9.51 சதவீதம், பிகார் (5) 12.27 சதவீதம், சத்தீஸ்கர் (3) 7.75 சதவீதம், ஜம்மு-காஷ்மீர் (2) 0.99 சதவீதம், கர்நாடகா (14) 1.14 சதவீதம், மகாராஷ்டிரா (10) 0.85 சதவீதம், மணிப்பூர் (1) 1.78 சதவீதம், ஒடிசா (5) 2.15 சதவீதம், புதுச்சேரி (1) 1.62 சதவீதம், தமிழகம் (38) 0.81 சதவீதம், திரிபுரா (1) 0.00 சதவீதம், உத்தரப்பிரதேசம் (8) 3.99 சதவீதம், மேற்குவங்கம் (3) 0.55 சதவீத வாக்குகள் காலை 9 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக என தலைமை தேர்தல் ஆணையம் தகவல்.

காலை 09.55: சென்னை நெற்குன்றம் வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வாக்களித்தார்.

காலை 9.50: சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்தார்

காலை 09.46: நான் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன்! நீங்கள்?-வாக்களித்த பின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

காலை 09.45: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குப்பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

காலை 09.40: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெசன்ட் நகர் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். ஆட்சி மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர் என்றார்.

காலை 09.30: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

காலை 09.25: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.

**எதிர்க்கட்சிகளை குறி வைத்து வருமான வரித்துறை உள்ளிட்ட சோதனைகள் நடைபெறுகிறது. அதிமுக-வை முற்றிலுமாக பாஜக ஆக்கிரமித்துள்ளது என வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டியளித்தார்.

காலை 09.20: கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது குடும்பத்துடன் ராமநகரா வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

காலை 09.17: தள்ளாத வயதிலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

காலை 09.15: சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 09.10: உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56-ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

காலை 09.05: விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் அன்புமணி ராமதாஸ்

காலை 09.00: சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு அவருடைய மகனும், நடிகருமான மகன் விக்ரம் பிரபு உள்பட குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

காலை 08.58: நடிகைகள் மீனா, ஆர்த்தி, நடிகர்கள் மயில்சாமி, ஸ்ரீகாந்த் ஆகியோர் வாக்களிப்பு

காலை 08.55: என் கடமையை நான் செய்துவிட்டேன். மற்றவர்களும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் – சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மகளுடன் காத்திருந்து வாக்களித்த கமல் பேட்டி

காலை 08.53: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே உள்ள அண்ணாவரம் கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.

காலை 08.50: பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சிப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, ஒரு மணி நேரமாக வாக்காளர்கள் காத்திருப்பு.

காலை 08.47: மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பாதிவு இயந்திரம் கோளாறு. சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறுவதால், வாக்குப்பதிவு தாமதம்.

காலை 08.45: நாமக்கல்லில் நகராட்சி அரசு தெற்கு பள்ளியில் வாக்குச்சாவடி 156-ல் வாக்கு இயந்திரம், திடீரென கோளாறால் ஏற்கனவே வாக்களித்த 21 பேர் மீண்டும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென ரீசெட் ஆனதாக தகவல்

காலை 08.40: சென்னை அடுத்துள்ள தாம்பரம் நேஷனல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு. 

காலை 08.35: நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளை பகுதி வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது. வாக்காளர்கள் காத்திருப்பு.

காலை 08.33: தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் நீண்ட நேரமாக காத்திருப்பு.

காலை 08.30: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

காலை 08.20: வாக்களித்து விட்டு பின்னர் தான் நாட்டை குறை சொல்லவோ திருத்தவோ செய்யலாம். குடிமகனின் கடமை வாக்களிப்பது. வாக்களியுங்கள், நாட்டை மாற்றுங்கள் – சாலிகிராமத்தில் வாக்களித்த நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி

காலை 08.15: நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பு

காலை 08.10: சென்னை ஆழ்வார்பேட்டை மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி 27-ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நீண்ட நேரமாக காத்திருப்பு

காலை 08.05: சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது மனைவி ஸ்ரீநிதி மற்றும் தனது தாயார் நளினி சிதம்பரம் ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

காலை 08.03: சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள மாநகாரட்சி பள்ளியில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.

காலை 08.00: தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரமாக ஒரு வாக்கு கூட பதிவு செய்யப்படவில்லை

காலை 07.50: நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்

காலை 07.49: முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 07.48: புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி, அறந்தாங்கி பெருங்காடு வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் பழுது. பழுது நீக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காலை 07.47: பாஜக தமிழக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார்.

காலை 07.46: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடியில் மின்வெட்டால் வாக்குப்பதிவு தாமதம்.

காலை 07.45: முதல்வர் பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்ய எடப்பாடி சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருப்பு

காலை 07.30: நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

காலை 07.26: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்

காலை 07.15: திருவாரூரில் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது.

காலை 07.04: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் ஆகியோர் தங்களது வாக்கினை முதல் ஆளாக பதிவு செய்தனர்.

காலை 07.02: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் உள்ள கண்டனூர் பெத்தாள் ஆச்சிப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 07.00: தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.