×

பஞ்சாயத்தாடா இது? இந்த கூட்டத்தில் எனக்கு மரியாதை கிடையாது – தேர்தல் ஆணையர் கடுப்ஸ்

ராணுவ நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை தேர்தல் பரப்புரையின் போது பயன்படுத்தக்கூடாது என்பது நடத்தை விதிகளில் ஒன்று. ராணுவ நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை தேர்தல் பரப்புரையின் போது பயன்படுத்தக்கூடாது என்பது நடத்தை விதிகளில் ஒன்று. ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய பரப்புரையின் போது ஒருமுறை அல்ல இருமுறை அல்ல 6 முறை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்தும் அபிநந்தன் மீட்பு குறித்தும் பேசி இருந்தார். ஒவ்வொரு முறை அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இராணுவ
 

ராணுவ நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை தேர்தல் பரப்புரையின் போது பயன்படுத்தக்கூடாது என்பது நடத்தை விதிகளில் ஒன்று.

ராணுவ நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை தேர்தல் பரப்புரையின் போது பயன்படுத்தக்கூடாது என்பது நடத்தை விதிகளில் ஒன்று. ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய பரப்புரையின் போது ஒருமுறை அல்ல இருமுறை அல்ல 6 முறை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்தும் அபிநந்தன் மீட்பு குறித்தும் பேசி இருந்தார். ஒவ்வொரு முறை அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இராணுவ நடவடிக்கைகளை தனது புஜ பலாக்கிரமமாக அள்ளி விட்ட போதெல்லாம், எதிர்க்கட்சிகள் அதனை புகாராக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன.

ஒவ்வொரு முறையும் புகாரை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்ற இரு ஆணையர்களான அசோக் லவசா, சுஷில் சந்திரா உள்ளிட்ட மூவர் குழு, பிரதமர் மோடி பேசியது தவறு இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கி அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

நடத்தை விதிகளை பிரதமர் அப்பட்டமாக மீறி இருந்தாலும் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, மாறாக புகார்களை புறந்தள்ளியது. இப்பொழுது இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் மூவரில் ஒருவரான அசோக் லவசா. தன்னுடைய கருத்துக்களுக்கு இந்த குழு மதிப்பு அளிப்பதில்லை என்பதால் மேற்கொண்டு இந்த குழுவில் தொடர முடியாது என்று தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

இந்த கடிதம் வெளியான பிறகுதான், நடத்தை விதிகள் மீறல் புகார்களை விசாரிக்கும் குழு, ஒருமித்த கருத்து அடிப்படையில் மோடி மீதான புகார்களை தள்ளுபடி செய்யவில்லை என்பது தெளிவாகி உள்ளது.