×

நான் கற்ற பரம்பரை, குற்றப் பரம்பரை அல்ல: தமிழிசையின் சர்ச்சை டிவீட்; வலுக்கும் எதிர்ப்பு!

தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது குற்ற வழக்குகள் குறித்து தமிழிசை குறிப்பிடாததற்கு அவர் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது குற்ற வழக்குகள் குறித்து தமிழிசை குறிப்பிடாததற்கு அவர் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்தது. அந்த வகையில்
 

தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது குற்ற வழக்குகள் குறித்து தமிழிசை குறிப்பிடாததற்கு அவர் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது குற்ற வழக்குகள் குறித்து தமிழிசை குறிப்பிடாததற்கு அவர் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்  வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்தது. 
அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக சார்பில் களம் காணும் கனிமொழி ஆகிய இருவரது வேட்புமனுக்களின்  மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. 

நிறுத்திவைக்கப்பட்ட வேட்புமனு

இதற்குக் காரணமாக, திமுக வேட்பாளர் கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாததும்,தமிழிசையின் கணவர் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, அவரது  வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்துக் குறிப்பிடாதது போன்ற காரணங்களுக்காக  நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 5 மணிநேர இழுபறிக்குப் பிறகு இவர்களது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

கடும் எதிர்ப்பு

இந்நிலையில் இது குறித்து தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை. குற்றப் பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே.வீண் வதந்தி? தோல்வி பயம்???’ என்று பதிவிட்டிருந்தார். இடர்க்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றப்பரம்பரை என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட  சமூகத்தினருக்கு எதிரான கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். இவர்கள்  சீர்மரபினர் என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த சட்டம் 1947-ல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பஞ்சாபை திணறடித்த கொல்கத்தா அணி – இரண்டாவது வெற்றி