×

தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் நன்றி!

வழக்கு விசாரணையின் போது டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது சென்னை: அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக,
 

வழக்கு விசாரணையின் போது டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது

சென்னை: அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார். ஆனால், மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும் அவர்கள் சின்னம் கிடைக்காமல் இருந்தனர்.

அதேசமயம், ஏற்கனவே தான் போட்டியிட்டு பெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதனை ஏற்ற நீதிமன்றம், தினகரன் அணியின் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தினகரன், “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 59 வேட்பாளர்களுக்கும் “பரிசுப்பெட்டி” சின்னத்தை ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க

கணவனை கொன்ற மனைவி: கழிவுநீர் தொட்டியில் சடலத்தை மறைத்து நாடகமாடியது அம்பலம்!