×

தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதல்: பாஜக அரசு குறித்து பாகிஸ்தான் பிரதமரின் அதிர்ச்சி தகவல்

ஏற்கனவே இது போன்ற ஒரு செய்தியை அமெரிக்க உளவு நிறுவனம் புல்வாமா தாக்குதலுக்கு முன் சொல்லி இருந்தது. நேற்று பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் மக்களோடு தொலைக்காட்சியில் உரையாடினார். அதில் அவர் பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக பேசி இருந்தாலும் அவர் கூறிய ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இம்ரான், இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வேண்டுமென்றே பாகிஸ்தான் மீது பிஜேபி அரசு ஒரு தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஒரு
 

ஏற்கனவே இது போன்ற ஒரு செய்தியை அமெரிக்க உளவு நிறுவனம் புல்வாமா தாக்குதலுக்கு முன் சொல்லி இருந்தது.

நேற்று பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் மக்களோடு தொலைக்காட்சியில் உரையாடினார். அதில் அவர் பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக பேசி இருந்தாலும் அவர் கூறிய ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது.

இம்ரான், இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வேண்டுமென்றே பாகிஸ்தான் மீது பிஜேபி அரசு ஒரு தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஒரு செய்தியை அவர் பாகிஸ்தான் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே இது போன்ற ஒரு செய்தியை அமெரிக்க உளவு நிறுவனம் புல்வாமா தாக்குதலுக்கு முன் சொல்லி இருந்தது.

பிஜேபி அரசு வெற்றி பெறுவதற்காக ராணுவத்தை வைத்து பாகிஸ்தானோடு தேவையற்ற ஒரு போரை தொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது இந்தியாவில் வேண்டுமென்றே மதக்கலவரத்தை பிஜேபி அரசே செய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னது. அதை அப்போது நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பிற்காலத்தில் அது தான் நடந்தது. அதனால் நாம் நமது 40 ராணுவ வீரர்களைப் பறிகொடுத்து விட்டோம். அதை தற்போது ஓட்டாக பிஜேபி பயன்படுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தில்தான் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிஜேபியின் தவறான பொருளாதார கொள்கைகளாலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுத்த நடவடிக்கைகளாலும் இந்தியா முழுமைக்கும் பிஜேபிக்கும், மோடிக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு அலை இருக்கிறது. அதை சமாளிக்க மோடி கும்பலும் ஆர்எஸ்எஸ் கும்பலும் இதுபோன்ற செயல்களைச் செய்யாது என்று நினைப்பதற்கில்லை. அவர்கள் எப்படியாகினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறித்தனத்தோடு இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நேற்றைய பேச்சு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.

எழுதியவர்: கொண்டல் சாமி ( மே 17 இயக்கம்)

இதையும் வாசிங்க

பதவி போச்சே; நொந்துபோன ராதாரவி?!