×

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி!

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர் புதுதில்லி: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில்
 

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்

புதுதில்லி: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

 இதையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அதேசமயம், திருப்பரங்குன்றம் வழக்கை திமுக நிர்வாகி சரவணன் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அத்துடன் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது எனவும், சரவணனை வெற்றி வேட்பாளராக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. மேலும், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை கிருஷ்ணசாமி திரும்பப் பெற்றுள்ளதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. எனவே, வழக்குகளை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இதனிடையே, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிடப்பட்டது. இந்த பதில் அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் இப்போதே தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டது.

இதையும் வாசிங்க

சிறு குழந்தைகள் மீது கைவைத்தால் நாக்கு வெளியே பிதுங்க தூக்கில் போடணும்!