×

சொந்த வலைதளத்தை பாதுகாக்க முடியாத பாஜக, நாட்டை எப்படி காக்கும்?! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், பாஜக வலைதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என பல்வேறு தகவல்கள் அதில்
 

பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.bjp.org கடந்த 15 நாட்களாக முடங்கி கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், பாஜக வலைதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என பல்வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பாஜக வலைதளத்தில் உள்ள தகவல்களை அப்படியே மீட்டெடுப்பதற்காக சைபர் கிரைம் அதிகாரிகள் போராடி வருகின்றனர். பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. எனினும் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகப்பில், ”இடையூறுக்கு வருந்துகிறோம். பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தரப்பை எதிர்கட்சியும் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

சொந்த வலைதளத்தையே பாதுகாக்க முடியாத பாஜக, நாட்டை எப்படி பாதுகாக்கும்?, பெயருக்கு முன்னால் சவுகிதார் (காவலர்) என அடைமொழி சேர்த்துக் கொண்டால் போதுமா? என கலாய்த்து வருகின்றனர்.