×

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: முதல்வரின் வாகனத்தை நோக்கி பறந்து வந்த செருப்பு; தஞ்சாவூரில் பரபரப்பு!

தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், முதல்வர் வாகனத்தின் மீது மர்மநபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்: தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், முதல்வர் வாகனத்தின் மீது மர்மநபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர பிரசாரம் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம்
 

தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வரும், முதல்வர் வாகனத்தின் மீது மர்மநபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர்: தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வரும், முதல்வர் வாகனத்தின் மீது மர்மநபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தீவிர பிரசாரம் 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதும், அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்காக முதல்வர் எடப்பாடி களமிறங்கியதும் தேர்தல் பிரசாரத்தைக் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. 

தஞ்சாவூரில்  எடப்பாடி 

இந்நிலையில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு  எதிரான பேச்சுக்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார். இதே போல் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய தொகுதிகளில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பறந்து வந்த செருப்பு 

 

அவரது பிரசாரத்தின் ஒருபகுதியாக  ஒரத்தநாட்டில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராசனுக்கு ஆதரவாக இரவு 9 மணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக  கூட்டத்தில் இருந்து செருப்பு ஒன்று பறந்து  வந்து முதல்வரின் பிரசார  வாகனத்தில் மீது விழுந்தது. அதனால் அங்கிருந்த அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்தியில் இது போன்று அசம்பாவிதத்தை ஏற்படுத்திய மர்மநபரை  போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: அன்புமணியை பார்த்து கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி: வாயில் அடித்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ!