×

காலி சேர்களை போட்டோ எடுத்தால் பத்திரிகையாளரா இருந்தாலும் அடிப்போம்: பாஜகவினர் கோபம்?!

பாஜகவினரும் தமிழக மக்கள் கலாய்ப்பதை எத்தனை நாட்களுக்குதான் தாங்குவார்கள், இனியாவது தமிழக பத்திரிகையாளர்கள் அவர்கள் மனதை புரிந்து நடந்துகொள்வார்களா?.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்களை கூட்டத்தில் இருந்த பாஜகவினர் சிலர் தகாத வார்தைகளால் திட்டி தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் பாஜகவை மிக மோசமாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியம் இட வகிக்கிறது. பிரதமர் மோடி வந்தால் #gobackmodi
 

பாஜகவினரும் தமிழக மக்கள் கலாய்ப்பதை எத்தனை நாட்களுக்குதான் தாங்குவார்கள், இனியாவது தமிழக பத்திரிகையாளர்கள் அவர்கள் மனதை புரிந்து நடந்துகொள்வார்களா?..

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்களை கூட்டத்தில் இருந்த பாஜகவினர் சிலர் தகாத வார்தைகளால் திட்டி தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பாஜகவை மிக மோசமாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியம் இட வகிக்கிறது. பிரதமர் மோடி வந்தால் #gobackmodi என டிரெண்ட் செய்வது துவங்கி பாஜகவினரை சமூக வலைதளங்களில் கலாய்ப்பது என இணையத்திலேயே அத்தனை பாஜக எதிர்ப்பு. இதனால் பாஜகவினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Pc: TOI

பாஜகவினர் பொதுக்கூட்டம் நடத்தினாலே பொதுவாக அன்று இணையத்தில் காலி சேர்களின் புகைப்படம் பகிரப்படுவது வழக்கமாகிவிட்டது. பாஜகவுக்கு கூட்டம் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த இதனை ஒவ்வொரு முறையும் ஷேர் செய்கின்றனர். சரி நெட்டிசன்கள்தான் பொய் சொல்கிறார்கள் என்று நினைத்தால், சிறிது நேரங்களிலேயே ஏதாவது ஒரு ஊடகம் அதனை செய்தியாக வெளியிடும். பாஜக கூட்டத்தில் காலி சேர்கள் என்ற தலைப்பிலேயே செய்திகள் வெளியாகியிருக்கிறது!

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது சிலர் சேர்களை விட்டு எழுந்து சென்றனர். பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச துவங்கினார். அதன் பிறகு ஏராளமான மக்கள் கூட்டத்தில் இருந்து எழ ஆரம்பித்தனர். இதனால் சேர்கள் காலியானது, அதனை பத்திரிகையாளர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றபோது பாஜகவினர் சிலர் அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினரும் தமிழக மக்கள் கலாய்ப்பதை எத்தனை நாட்களுக்குதான் தாங்குவார்கள், இனியாவது தமிழக பத்திரிகையாளர்கள் அவர்கள் மனதை புரிந்து நடந்துகொள்வார்களா?..