×

கடன் தொல்லையால் கணவன் தற்கொலை; வறுமையில் வாடிய இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

விவசாய தொழிலுக்காக ரூ.70,000 கடன் வாங்கியிருந்த சுதாகர் அதனை திருப்பி அடைக்க முடியாமல் கடந்த 2011-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் புனே: கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேர்தலில் வெற்றி பெரும் பொருட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்
 

விவசாய தொழிலுக்காக ரூ.70,000 கடன் வாங்கியிருந்த சுதாகர் அதனை திருப்பி அடைக்க முடியாமல் கடந்த 2011-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்

புனே: கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேர்தலில் வெற்றி பெரும் பொருட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் விவசாயி சுதாகர். இவரது மனைவி வைஷாலி (28). விவசாய தொழிலுக்காக ரூ.70,000 கடன் வாங்கியிருந்த சுதாகர் அதனை திருப்பி அடைக்க முடியாமல் கடந்த 2011-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்னர், அங்கன்வாடியில் மாதம் ரூ.3500 சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்த வைஷாலிக்கு விதவை பென்ஷனாக ரூ.600 வந்துள்ளது. இந்த சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு குடும்ப செலவுகளையும் பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே, இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வைஷாலி பேசியதாக தெரிகிறது. அவரது பிரமாதமான பேச்சை பார்த்து வியந்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் செலவுகளுக்காக தனக்கு பணம் கோரி சமூக வலைதளங்களில் வைஷாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ஏராளமான நிதியுதவி கிடைத்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.1.5 லட்சம் நிதியுதவி அவருக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து வைஷாலி கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவது எனக்கு பொன்னான வாய்ப்பாகும். விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம் என்றார்.

இதையும் வாசிங்க

நெல்லையில் வெடிகுண்டு சோதனை; போலீசார் குவிப்பு…பதற்றம்!