×

என்னுடைய உடன்பிறவாத சகோதரர் உதயநிதி : அழகு குறித்த மீம்ஸ்-க்கு பதிலடி கொடுத்த தமிழச்சி

தென்சென்னை தி.மு.க.வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை உதயநிதி அழகான வேட்பாளர் என கூறியது குறித்து தமிழச்சி விளக்கம் அளித்துள்ளார் சென்னை: தென்சென்னை தி.மு.க.வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை உதயநிதி அழகான வேட்பாளர் என கூறியது குறித்து தமிழச்சி விளக்கம் அளித்துள்ளார் மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான, அதிமுக, திமுக ஆகிய அக்கட்சிகள் தேர்தல் பணியில் முனைப்புக் காட்டி வருகின்றது. அந்த வகையில், இரண்டு கட்சிகளுமே,
 

தென்சென்னை தி.மு.க.வேட்பாளர் தமிழச்சி  தங்கப்பாண்டியனை உதயநிதி  அழகான வேட்பாளர் என கூறியது குறித்து  தமிழச்சி விளக்கம் அளித்துள்ளார்

சென்னை: தென்சென்னை தி.மு.க.வேட்பாளர் தமிழச்சி  தங்கப்பாண்டியனை உதயநிதி  அழகான வேட்பாளர் என கூறியது குறித்து  தமிழச்சி விளக்கம் அளித்துள்ளார்

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக தேர்தல் களம்  சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.  தமிழகத்தின் பிரதான கட்சிகளான, அதிமுக, திமுக ஆகிய அக்கட்சிகள் தேர்தல் பணியில் முனைப்புக் காட்டி வருகின்றது. அந்த வகையில், இரண்டு கட்சிகளுமே, கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை போன்றவற்றை வெளியிட்டுத் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளது. 

  தமிழச்சி குறித்து பேசிய உதயநிதி 

அதன்படி  தென்சென்னை தொகுதிக்கான திமுக சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ள  தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ‘உதயநிதி  என்னுடைய அக்கா தமிழச்சி. அவரும் என்னை தம்பி என்றே பாசத்துடன் அழைப்பார். இது இப்போது அல்ல. மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நட்பு. உண்மையாகவே தலைவர் கருணாநிதி மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த பாசமும் நட்பும் வைத்திருப்பவர். அந்த நட்பே அவருக்கு வெற்றியை பெற்றுத்தரும் என நம்புகிறேன். தென்சென்னை மக்களை கேட்டுக்கொள்வது இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் அழகு என்று கூறியது அவரது தோற்றத்தை வைத்து மட்டுமல்ல. அவரது அழகு தமிழ், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அவரது கொள்கை, திமுகவின் மீது கொண்டுள்ள கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றை வைத்து தான் சொன்னேன்’ என்றார். உதயநிதியின் இந்த பேச்சு,  சமூக வலைத்தளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்பட்டது.

மீம்ஸ் போட்டு கலாய்ப்பது எல்லாம் சிறுபிள்ளைத் தனம்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன், ‘ முதல் வரியை பிடித்து கொண்டு தொங்குவது, மீம்ஸ் போட்டு கலாய்ப்பது எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது. என்னுடைய உடன்பிறவாத சகோதரர் உதயநிதி. முழுமையாக என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டுப் பேச வேண்டும். ஒரு நல்ல கருத்தில் அறிவு என்பது அழகு. தமிழ் இலக்கிய பற்று என்பது அழகு. இயக்கத்தின் மீது வைத்திருக்கின்ற கொள்கை பிடிப்பு அழகு என்று எனது சகோதரர் உதயநிதி சொல்வதை விஷமத்தனமாக திரித்துக் கூறினால் அதுகுறித்து எல்லாம் எங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க நாங்கள் தயாராக இல்லை’  என்று பதிலடி கொடுத்துள்ளார்.