×

எடப்பாடி விவசாயி அல்ல, விஷவாயு: ஸ்டாலின் கடும் தாக்கு!

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சூறாவளி பிரசாரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுகவுக்கு
 

 எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சூறாவளி பிரசாரம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்

 

அந்த வகையில் மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை ஒத்தக்கடையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிகாரம் கையில் இல்லாத போதே திமுகவினர் அராஜகம் செய்து வருகின்றனர். அதிகாரம் வந்து விட்டால் அவர்களை அடக்க முடியாது. அதனால் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் நடந்த மர்ம கொலைகள் மீது மீண்டும் மறுவிசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். 

விவசாயி அல்ல, விஷவாயு

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில், திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்,  எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு. தமிழகத்தில் நடப்பது உதவாக்கரை ஆட்சி, அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறையே இல்லை. என்ன விசாரணை வேண்டுமானாலும் வைக்கட்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிலடி கொடுத்தார். 

இவ்வாறு மாறி மாறி அரசியல் கட்சி தலைவர்கள் வார்த்தை போர் நடத்திக் கொள்வதால் உண்மையில் அரசியல் களம் பற்றி எரிகிறது. 

இதையும் வாசிக்க: கள்ளகாதலால் நடந்த விபரீதம்: இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்; சேலத்தில் பரபரப்பு!