×

எச். ராஜாவுக்காக ஜெயலலிதா விஸ்வாசியை இழந்த அதிமுக?!

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்! மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால விஸ்வாசியாய் இருந்தவர் ராஜ கண்ணப்பன். அவர்
 

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்!

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால விஸ்வாசியாய் இருந்தவர் ராஜ கண்ணப்பன். அவர் அதிமுகவில் இருந்து விலகியது அரசியல் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர் ராஜ கண்ணப்பன், அந்தத் தொகுதியை எச்.ராஜாவுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக தரப்பு. அதுமட்டுமல்லாது ராஜ கண்ணப்பனுக்கு சீட் எதுவும் வழங்கவில்லை. அதிமுக கோட்டையான திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதும் ராஜா கண்ணப்பன் தரப்புக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் அவர் அதிமுகவை விட்டு பிரிந்து திமுகவுக்கு தன் ஆதரவை அளித்துள்ளார்.

அதிமுகவை விட்டு பிரிந்த ராஜ கண்ணப்பன், பாஜக கையில்தான் அதிமுக இருக்கிறது என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்! அம்மா ஆட்சியை வழங்குகிறோம் என மார்தட்டும் அதிமுக தரப்பு, ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை செய்ய விரும்பாத அத்தனை செயல்களையும் செய்து வருகிறது என பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது. சிவகங்கை தொகுதியை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கியிருந்தால், எதிரணிக்கு அவர் கடுமையான போட்டியாக இருந்திருப்பார். அவருக்கும் சீட் வழங்காமல், கடந்தமுறை சிவகங்கை மக்களவை தொகுதியில் வென்ற செந்தில்நாதனுக்கும் (அதிமுக) சீட் வழங்காமல், எச். ராஜாவுக்கு சீட் வழங்கியிருப்பது அதிமுக தரப்பிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!