×

உதய சூரியன் சின்னத்தில் நிற்காமல் வென்ற திருமாவுக்கு வாழ்த்து,..இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொல்ல வருகிறார்…

உதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர் திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வாழ்த்து வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. உதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர் திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வாழ்த்து வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர்
 

உதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர்  திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வாழ்த்து வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

உதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர்  திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வாழ்த்து வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனின் வெற்றி வாய்ப்பு நேற்று மாலைவரை இழுபறியாகவே இருந்தது. தொலைக்காட்சி நேரலைகளில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அவர் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி செய்திகள் வந்தன. அது தொடர்பான மீம்ஸ்கள் நேற்று இரவு வலைதளங்களில் குவிந்த நிலையில் ஒரு சிறு குழந்தையின் பலவித முகபாவங்களைப் போட்டு,…திருமா வாக்கு எண்ணிக்கை நிலவரம் டூ முடிவு அறிவிப்பு வரை – தமிழக மக்கள்’ என்ற ஒரு மீம்ஸ் உலகத் தரம் வாய்ந்ததாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக திருமாவின் வெற்றி குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு பதிவுகளை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்,…’ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! என்றும் அடுத்து,…’மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்’ என்றும் பதிவிட்டிருந்தார்.

இதன் பின்னூட்டத்தில் ரஞ்சித்துக்கு எதிராக பதிவிட்ட பலரும் ,…திருமாவின் வெற்றியை தலித்தின் வெற்றியாக பார்க்கிறார் @beemji. நாங்கள் சமூக நீதிக்கான வெற்றியாக ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றியாக பார்க்கிறோம் என்று பதிலளித்து வருகிறார்கள்.