×

அடுத்த எம்.ஜி.ஆர் ரஜினிதான்: ஆனா அவரு பிஜேபி கூட கூட்டு சேரணும்!?

ரஜினி அரசியலில் இன்னொரு எம்ஜிஆர் போல வருவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். சென்னை: ரஜினி அரசியலில் இன்னொரு எம்ஜிஆர் போல வருவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகி விட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 38 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை
 

ரஜினி அரசியலில் இன்னொரு எம்ஜிஆர் போல வருவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். 

சென்னை:  ரஜினி அரசியலில் இன்னொரு எம்ஜிஆர் போல வருவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். 

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகி விட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 38 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளதால் ஆட்சியை இன்னும் 2 வருட காலம் அதிமுகவே தக்கவைத்துள்ள நிகழ்வு நடந்துள்ளது. 

இது ஒருபுறமிருக்க  திமுக – அதிமுக கட்சிகளை  தவிர நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களம் கண்டன. இருப்பினும் சட்டமன்ற தேர்தலின்போதுதான் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களவை தேர்தல் தனது இலக்கு அல்ல. சட்டமன்றமே  தன்  இலக்கு என்று  அறிவித்தார். இன்னும் ஆட்சி மாற்றம் வர 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரஜினியும் கட்சி ஆரம்பிக்க இரண்டு ஆண்டுகளாகும்  என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியின் அரசியல் குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரஜினி எம்ஜிஆரைப் போலவே ஆன்மீகம், தேசியம் இரண்டிலும்  நம்பிக்கை கொண்டவர். மக்கள் செல்வாக்கை பெற்றவர். அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் மாபெரும் வெற்றி பெற்று இன்னொரு எம்ஜிஆரை போல  உருவெடுப்பார் .

ஆனால்  அவர் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கூறி வருகிறேன். அது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்.எதுவாக இருப்பினும் அவர் அரசியலில் சாதிப்பார்’ என்றார்.