×

‘அ.தி.மு.க என்றால் அடல்ட்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்றக் கழகம்’ – கடுமையாக விமர்சித்த உதயநிதி; கடுப்பான அ.தி.மு.க-வினர்

அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வேலூர்: அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல்
 

அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

வேலூர்: அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அதன்படி  தி.மு.க சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

‘மோடி  ஒரு கோமாளி’ 

அப்போது மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி, ‘வேலூரில் பிரச்சாரம் தொடங்குவதைப் பெருமையாகப் பார்க்கிறேன். வெளிநாடு வாழ்  பிரதமர் மோடி தான் மோடி. அவர் 5 ஆண்டில் 4 முறை மட்டுமே தமிழகம் வந்துள்ளார். ஒகி, கஜா புயல் போன்ற துயரங்களில் கை கொடுக்கவில்லை. போதிய நிதியை நமக்கு வழங்க வில்லை. மோடி ஒரு திவாலான ஆட்சியை நடத்தி வருகிறார். மோடி தன்னை சவுக்கிதார் என அழைக்க வேண்டும் என மோடி கூறினாலும், அவர் காவலாளி அல்ல, அவர் ஒரு கோமாளி’ என்றார்.

அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம்

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்.மோடி தான்  வில்லன், ராமதாசும், அன்புமணி ராமதாசும் காமெடியன்கள். அ.தி.மு.க என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல, அடல்ஸ் ஒன்லி திராவிட முன்னேற்ற கழகம்.  உதாரணம் நிர்மலாதேவி, ஜெயகுமார் விவகாரம் தற்போது கொடூரமான பொள்ளாச்சி சம்பவம்.  அம்மா வழியில் ஆட்சி என கூறி பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

உதயநிதியின் இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உதயநிதியின் இந்தபேச்சு அ.தி.மு.க-வினர் மத்தியில் கோபத்தை உண்டாகியுள்ளது.