×

191 தொகுதிகளில் களம் காணும் “இரட்டை இலை”! தமிழகத்தில் மலரும் இலை, மலர், பழம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதியும், அதிமுக கூட்டணியில் என். ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் இரட்டை
 

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதியும், அதிமுக கூட்டணியில் என். ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. அதேபோல், புரட்சி பாரதம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சிறு சிறு கட்சிகளுக்கு ஒரு ஒரு தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதாவது பாமக மாம்பழம் சின்னத்திலும், பாஜக தாமரை சின்னத்திலும் போட்டியிடவுள்ளன. மீதமுள்ள அனைத்து கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளன.