×

52 ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய பிரபல நடிகை: முதல்வர் மகனை மண்ணை கவ்வ வைத்த சுவாரஸ்யம்!

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை சுமலதா அமோக வெற்றி பெற்றுள்ளார். மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை சுமலதா அமோக வெற்றி பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஆனால் காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியைக் குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கினார்.
 

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை சுமலதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை சுமலதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.  ஆனால்  காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியைக் குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாகக்  களமிறங்கினார். அவருக்கு பாஜக ஆதரவு அளித்தது.

இதை தொடர்ந்து குமாரசாமியினால் தன்  ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும், தன் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் புலம்பினார் சுமலதா.  இந்நிலையில் தன்னை எதிர்த்து களமிறங்கிய  குமாரசாமியின் மகன்  நிகிலை விட , சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சுமலதா.

இதன் மூலம்,  52 ஆண்டுகளுக்குப் பிறகு  கர்நாடகாவில் உள்ள மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற முதல் சுயேச்சை வேட்பாளர் ஆவார்.  முதன் முதலாக மைசூர் மாநிலத்தில், பிஜப்பூர் வடக்கு தொகுதியில் சுயேச்சை  வேட்பாளர் துபே ராஜாராம் கிரிடார்லால் வென்றார். இதையடுத்து  பத்து வருடங்கள் கழித்து, 1967 ஆம் ஆண்டில் கனரா தொகுதியில்  தினாக்கர் தேசாய் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது மாண்டியாவில் சுமலதா வென்று சாதித்துக் காட்டியுள்ளார்.