×

மாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது

டியூசன் என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை : டியூசன் என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியாக வசித்து வந்த ஆசிரியை ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை நித்யா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இவர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆரணியில் குடும்பம்
 

டியூசன் என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை : டியூசன் என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

தனியாக வசித்து வந்த ஆசிரியை 

ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை  நித்யா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இவர் வேறு பள்ளிக்கு  இடம் மாற்றம் செய்யப்பட்டார்.  ஆரணியில் குடும்பம் இருந்த நிலையில், தொலைவு காரணமாக நித்யா மட்டும் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.  அப்போது நித்யா அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். 

மாணவர்களிடம் அத்துமீறிய  நித்யா

அப்போது மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியை நித்யா நிர்வாணமாக நடனமாடுவதுடன், மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது நித்யாவின் கணவர் காதுக்கு எட்ட, அவரை நித்யாவை கண்டித்துள்ளார்.ஆனால்  அவர் தனது  தவறை சரி செய்யாததால்,  தனது மனைவி மாணவர்களுடன் நிர்வாணமாக இருப்பதைப் புகைப்பட ஆதாரங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு நித்யாவின் கணவர் அனுப்பியுள்ளார்.

குழந்தைகள் நல அலுவலர் புகார் 

இதன் அடிப்படையில், ஆசிரியை  நித்யா மாமண்டூர் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு. அவர் மீது  துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களிடம்  நடத்திய விசாரணையின்  அடிப்படையில், குழந்தைகள் நல அலுவலர் சித்ரா பிரியங்கா, நித்யா மீது ஆரணி மகளிர் போலீசில் புகாரளித்தார். 

போக்சோ சட்டத்தின் கீழ் கைது 

புகாரின் அடிப்படையில், நித்யாவை போலீசார் கைது செய்த போலீசார், நித்யா மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆசிரியை நித்யாவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிர்ச்சியில் பொதுமக்கள் 

மாணவர்களுக்கு  வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.