×

போரடித்தால் ரயிலில் பிச்சை, இரவில் வனவாசம், பகலில் சுகவாசம்! சிக்கினான் பலே திருடன்!

இரவு நேரங்களில் மட்டும் அந்நபர் அங்கு சுற்றித் திரிந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர், அவரை பின்தொடர்ந்தபோது, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஓலை கொட்டகை அமைத்து ஒய்யாரமாக தங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நெல்லை மாவட்டம், அத்திரிமலையில் உள்ள கோரக்கநாதர் கோவிலுக்கு அமாவாசை பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோரக்கநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கல்லாற்றாங்கரையில், வனத்துறை அனுமதி இல்லாமல் ஒருவர் அடிக்கடி தென்படவும், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வரக்கூடாது என வனத்துறையினர் விரட்டியடித்துள்ளனர். அதன்பின்னர்,
 

இரவு நேரங்களில் மட்டும் அந்நபர் அங்கு சுற்றித் திரிந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர், அவரை பின்தொடர்ந்தபோது, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஓலை கொட்டகை அமைத்து ஒய்யாரமாக‌ தங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நெல்லை மாவட்டம், அத்திரிமலையில் உள்ள கோரக்கநாதர் கோவிலுக்கு அமாவாசை பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோரக்கநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கல்லாற்றாங்கரையில், வனத்துறை அனுமதி இல்லாமல் ஒருவர் அடிக்கடி தென்படவும், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வரக்கூடாது என வனத்துறையினர் விரட்டியடித்துள்ளனர். அதன்பின்னர், இரவு நேரங்களில் மட்டும் அந்நபர் அங்கு சுற்றித் திரிந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர், அவரை பின்தொடர்ந்தபோது, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஓலை கொட்டகை அமைத்து ஒய்யாரமாக‌ தங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விருத்தாசலம் அடுத்த ஐவதகுடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ரயில்களில் அழுக்கு உடைகளை அணிந்துகொண்டு, ரயிலை சுத்தம்செய்வதுபோல நடித்து, தனியே சிக்கும் பெண்களிடம் நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு ஊருக்குள் வசதியாக வாழ்வதும், இருட்டானால் காட்டுக்குள் ஓய்வெடுப்பதும், கையில் பணம் தீர்ந்ததும் மீண்டும் ரயில்களில் கொள்ளையடிப்பதுமென, கடந்த 5 ஆண்டுகளாக ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் சுப்பிரமணியன். ஏற்கெனவே, பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் இருப்பதும், 15 மாதங்கள் அவன் சிறையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.