×

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் நடந்த பாலியல் கொடூரம்: வீட்டில் சிக்கிய முக்கிய தடயங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பொள்ளாச்சி வழக்கு : பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள
 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பொள்ளாச்சி வழக்கு :

பொள்ளாச்சியில்  பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.  இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

 

சிபிசிஐடி சோதனை:

இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு, மாக்கினாம்பட்டியில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். பெண்களை வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு என்பது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், பென்ட்ரைவ் 
 

இந்த சோதனையில் வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர். நேற்று இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய தடயமாகக் கருதப்படும், லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.