×

சிறுமியை வன்கொடுமை செய்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம்: பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த பரமசிவம் – பழனியம்மாள் தம்பதியின் மகள்
 

சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்து, கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் : சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்து, கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த பரமசிவம் – பழனியம்மாள் தம்பதியின் மகள் பூங்கொடியை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்தது. அதன் பின்னர், அப்பகுதியிலிருந்த மலையடிவாரத்தின் ஒரு மரத்தில் சிறுமியை நிர்வாண நிலையில் தூக்கில் தொங்க விட்டு கும்பல் தப்பிச் சென்றது. 

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை பரமசிவம் புகார் அளித்தார். இதையடுத்து இவ்விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த, பாமக பிரமுகர் பூபதி, அவரது நண்பர்களான பிரபாகரன், ஆனந்தன், லாரி டிரைவர் ஆனந்தபாபு, பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேர் மீதும்   போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர்.

5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இவ்வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  விஜயகுமாரி  இருதரப்பு வாதங்களையும்  கேட்ட பின்னர், பாலியல் கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பூபதி, ஆனந்தன், ஆனந்தபாபு, பாலகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இவர்கள் ஐந்து பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதம், அபராதத் தொகை கட்டத்தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுமக்கள் வரவேற்பு 

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ள தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.