×

சரக்கு வாங்கோணும், டாக்டர் வய்வாரு, காசு குடு – அரசு மருத்துவமனை கம்பவுண்டர்!

காயத்திற்கு கட்டு போட வந்த நோயாளிகளிடம், “கட்டிங் காசு தந்தால் தான் கட்டு போடுவேன். வா இப்பவே வாங்கலாம், நான் இங்கு இருக்கிறவரைக்கு யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை” என்று உரிமையுடன் லஞ்சம் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. கோடிகணக்கான ரூபாயை தேர்தலில் செலவிட்டு வெல்லும் அரசியல்வாதி, ஒன்றுக்கு நான்கு – ஐந்தாக திரும்பப் பெறுகிறார். அதுவே அமைச்சராகிவிட்டால், எவ்வளவு டிவிடென்ட் கிடைக்கும் என்பதற்கெல்லாம் அளவே இல்லை. அரசியல்வாதியாகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா என்ன? ஜனநாயகத்தில் எல்லாருக்கும் சமவாய்ப்பு
 

காயத்திற்கு கட்டு போட வந்த நோயாளிகளிடம், “கட்டிங் காசு தந்தால் தான் கட்டு போடுவேன். வா இப்பவே வாங்கலாம், நான் இங்கு இருக்கிறவரைக்கு யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை” என்று உரிமையுடன் லஞ்சம் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.

கோடிகணக்கான ரூபாயை தேர்தலில் செலவிட்டு வெல்லும் அரசியல்வாதி, ஒன்றுக்கு நான்கு – ஐந்தாக திரும்பப் பெறுகிறார். அதுவே அமைச்சராகிவிட்டால், எவ்வளவு டிவிடென்ட் கிடைக்கும் என்பதற்கெல்லாம் அளவே இல்லை. அரசியல்வாதியாகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா என்ன? ஜனநாயகத்தில் எல்லாருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான், குரூப் 1, குரூப் 2, குருப் 3, குரூப் 4 என அவரவர் தகுதிக்கேற்ப லஞ்சம் வாங்கிக்கொள்ளும் வசதி இருக்கிறது.

கோவை, மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளைய அரசு மருத்துவமனை ஊழியர் ஜெயபால், நோயாளிகளுக்கு மருந்து எடுத்து தருவதற்கும், காயங்களுக்கு கட்டு போடுவதற்கும் தனியாக கட்டிங் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது. காயத்திற்கு கட்டு போட வந்த நோயாளிகளிடம், “கட்டிங் காசு தந்தால் தான் கட்டு போடுவேன். வா இப்பவே வாங்கலாம், நான் இங்கு இருக்கிறவரைக்கு யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை” என்று உரிமையுடன் லஞ்சம் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.