×

காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!

ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமலூர்: ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர். மர்மான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் சின்னபையன். அவரது
 

ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமலூர்: ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
மர்மான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் சின்னபையன். அவரது மனைவி லட்சுமி. இவர் கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். மேலும் அவரது கழுத்தில் இருந்த செயின், கம்மல் உள்ளிட்ட 7 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தது.  இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

3 மாதத்திற்கு  பிறகு கிடைத்த குற்றவாளி 

ஆனால் இந்த வழக்கில்  3 மாதங்களாகியும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.  இந்நிலையில் லட்சுமியின் உறவுக்கார பெண்ணான  பச்சியம்மாளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் லட்சுமியின் கணவர் சின்னபையனுடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்ததை  பச்சையம்மாள் ஒப்புக்கொண்டுள்ளார்.

கள்ளக்காதலால் நடந்த விபரீதம் 

இது குறித்து போலீசார் கூறுகையில்,  இறந்த லட்சுமியின் கணவர் சின்னப்பையனின் தங்கை மகள் பச்சியம்மாள். இவருக்கும் சின்னபையனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த லட்சுமி, இருவரையும் கண்டித்ததுடன், ஊரை கூட்டி சொல்லப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பச்சியம்மாள் லட்சுமியை மரப்பலகையால்  தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் எ அவர் அணிந்திருந்த நகைகளையும்  பறித்துக்கொண்டு சென்றுள்ளார். 

கைது செய்த போலீசார் 

இதற்கு சின்னப்பையனும்  உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து   லட்சுமியை கொலை செய்த பச்சியம்மாள், கணவர் சின்னபையன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இருவரையும்  ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  பாலியல் தொல்லை தந்த ஸ்விக்கி ஊழியர்: கூப்பன் கொடுத்து சரிக்கட்ட பார்த்த ஸ்விக்கி நிறுவனம்; அதிர்ச்சி சம்பவம்!