×

ஆன்லைன் மேட்ரிமோனியல் சந்தா வசூல் கொள்ளை. பர்ஸ் பத்திரம்!

குறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும். கருப்பானவர்களை கலராக்கும் சிவப்பழகு க்ரீம், லாட்ஜ்களுக்கு மாதம் ஒருமுறை விஜயம் செய்யும் சித்த வைத்தியர் போல சர்ச்சைகளுக்குப் பெயர்போனது ஆன்லைன் திருமண தகவல் மையங்கள். தொழில்முறை திருமண தரகர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, பெண்ணையோ பையனையோ நேரடியாகப் பார்த்து, சாதக பாதங்களை கண்கூடாகக் கண்டு,
 

குறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும்.

கருப்பானவர்களை கலராக்கும் சிவப்பழகு க்ரீம், லாட்ஜ்களுக்கு மாதம் ஒருமுறை விஜயம் செய்யும் சித்த வைத்தியர் போல சர்ச்சைகளுக்குப் பெயர்போனது ஆன்லைன் திருமண தகவல் மையங்கள். தொழில்முறை திருமண தரகர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, பெண்ணையோ பையனையோ நேரடியாகப் பார்த்து, சாதக பாதங்களை கண்கூடாகக் கண்டு, வீட்டில் இருக்கும் வசதி வாய்ப்புகள் அறிந்து அதன்பிறகு தகுதியான வரன்களைத் தேடித் தருவார்கள். இருவீட்டாரின் எதிர்பார்ப்பும் வசதியும் என்னவென்று தரகர்களுக்கு துல்லியமாக தெரியும் என்பதால், அதிகபட்சம் ஆறு மாதங்களில் வரன்கள் கைகூடுவது வெகு சாதாரணம்.

ஆனால், ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களின் தொழில் அடிப்படையே வேறு. நீங்கள் கருப்பா சிவப்பா, நெட்டையா குட்டையா என எதுவுமே தெரியாது.அழகுப்பதுமைகாளாக ஜொலிக்கும் பெண்களின் போட்டோக்களை ஆசையாக க்ளிக் செய்துப் பார்த்தால் அவர்கள் மாடல்களாக இருப்பர். அப்லோட் செய்யப்பட்டிருக்கும் போட்டோ மற்றும் பிற தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் அவர்களால் உறுதி தரவே முடியாது. அவர்களுக்குத் தேவை எல்லாம் நம்முடைய சந்தாப் பணம்தான். குறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும். இவர்களாவது பரவாயில்லை. ஒருசில திருமண வரன்தேடும் இணையதளங்களில், வரன்களின் தொலைபேசி எண்ணோ, முகவரியோகூட தராமல் போட்டோவை மட்டும் காட்டி பணம்பறிக்கும் சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன. அரசுதான் இவர்களுக்கு கடிவாளம் போடவேண்டும்!