×

டிடிவி வச்ச செக்… பிரியும் வாக்குகள்… ஆர்பி உதயகுமாருக்கு சவால்… கேப்பில் கெடாவெட்டும் திமுக! #thirumangalam

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளையுடன் பரப்புரை முடிவடையவுள்ளது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்ன? உங்கள் வாக்கு யாருக்கு? இந்தக் கேள்விகளை முன்வைத்து அந்தந்த தொகுதிகளுக்கான களநிலவரத்தை அறிந்துள்ளது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது
 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளையுடன் பரப்புரை முடிவடையவுள்ளது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்ன? உங்கள் வாக்கு யாருக்கு? இந்தக் கேள்விகளை முன்வைத்து அந்தந்த தொகுதிகளுக்கான களநிலவரத்தை அறிந்துள்ளது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது திருமங்கலம் தொகுதி.

அமைச்சர் ஆர்பி உதயகுமார் எம்எல்ஏவாக உள்ள தொகுதி என்பதாலும், தற்போது இரண்டாம் முறையாக போட்டியிடுகதாலும் கவனம் பெற்றுள்ளது. இங்கு முக்கலத்தோர் சமுதாய மக்களே அதிகமாக இருக்கின்றனர். இதனால் அமைச்சர் ஆர்பி உதயமாருக்கு சொந்த சமுதாய மக்களால் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. எனினும் வன்னியர் உள் ஒதுக்கீடு தென் மாவட்டங்களில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு திருமங்கலமும் விதிவிலக்கல்ல.

இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பு இருக்கிறது. இந்தச் சமயத்தில் தினகரன் மருதுசேனை இயக்க தலைவர் ஆதிநாராயணன் போட்டியிடுவதால் அதிருப்தியில் இருக்கும் பெருவாரியான கவர்வார் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே உதயகுமாரைத் தோற்கடித்தே தீருவோம் என பரப்புரை செய்துவருகிறார். இவர்களுடன் திமுகவின் மணிமாறனுன் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதைத் தான் களத்திலும் காண்கிறோம்.

மூன்று வேட்பாளர்களுமே சமபலத்துடன் மோதுகிறார்கள். வாக்குகள் சிதறுகின்றன. 1977ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 10 தேர்தல்களில் காங்கிரஸ் இரண்டு முறையும் மதிமுக ஒரு முறையும் வெற்றிபெற்றிருப்பது திமுகவிற்குச் சாதகமாக இருக்கிறது. அதிமுக தொடர்ந்து இருமுறை வென்றிருந்தாலும் இம்முறை ஹாட்ரிக் வெற்றி சாத்தியமில்லை என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன. கருத்துக்கணிப்பில் அதிகப்படியானோர் திமுகவிற்குத் தான் தங்கள் ஆதரவு என்று கூறியிருக்கிறார்கள். அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஜெயிப்பது சவலானதாகவே இருக்கும்… மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை காணுங்கள்…