×

#Tiruchengode ஆளுங்கட்சிக்கு கடும் எதிர்ப்பு.. உதிக்கும் உதயசூரியன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் திமுகவுக்கே சாதகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இப்படி இருக்கும் சூழலில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி திருச்செங்கோடு.. களம் காணும் வேட்பாளர்கள்: கடந்த 30 ஆண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக 4 முறையும் திமுக
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் திமுகவுக்கே சாதகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இப்படி இருக்கும் சூழலில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி திருச்செங்கோடு..

களம் காணும் வேட்பாளர்கள்:

கடந்த 30 ஆண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக 4 முறையும் திமுக மற்றும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவை சேர்ந்த பொன்.சரஸ்வதி. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதியே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுக கூட்டணியில் இருந்து கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

ஆளப்போவது யார்?

இந்த தொகுதியை பொறுத்தவரை மக்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்கே இருக்கிறது. ஆளுங்கட்சியான அதிமுக அரசின் மீது பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் அதிமுக அரசு செய்துத் தரவில்லை என்பது தான். மலைப்பகுதிகளிலும் கிராமப் புறங்களிலும் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை, பேருந்து நிறுத்தங்கள் அதிகமாக இல்லை, விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது, தெப்பக்குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சர்வேயின் முடிவில் திருச்செங்கோடு தொகுதி திமுகவுக்கே ஆதரவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!