×

#Pollachi எதிரொலிக்கும் பொள்ளாச்சி சம்பவம்.. கோட்டையை நழுவ விடும் அதிமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மக்களின் ஆதரவு யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி பொள்ளாச்சி. பொள்ளாச்சி சம்பவம்: நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவங்களுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, மிரட்டி கற்பை சூறையாடிய சம்பவம் தமிழக மக்களை பதைபதைக்கச் செய்தது.
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மக்களின் ஆதரவு யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி பொள்ளாச்சி.

பொள்ளாச்சி சம்பவம்:

நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவங்களுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, மிரட்டி கற்பை சூறையாடிய சம்பவம் தமிழக மக்களை பதைபதைக்கச் செய்தது. இச்சம்பவத்தின் அதிர்வலை இப்போது வரை ஓயவில்லை. பொள்ளாச்சி என்று சொன்னாலே இந்த சம்பவம் தான் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரும். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டார்களே தவிர, இதுவரையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பொள்ளாச்சி மக்களுக்கு ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை உண்டாக்கியது. அண்மையில் இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பெயரும் அடிபட்டது. பொள்ளாச்சியை உலுக்கி எடுத்த இச்சம்பவம் வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதே ஒருமித்த கருத்து.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக 5 முறையும் திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். இந்த முறையும் அவரே களமிறங்குகிறார். திமுகவில் இருந்து வரதராஜன் போட்டியிடுகிறார்.

ஆளப்போவது யார்?

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையில், அதிமுக அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பொள்ளாச்சி சம்பவம் தான். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருக்கும் மக்கள், திமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த தொகுதியின் அடிப்படை பிரச்னைகளாக மக்கள் சொல்லியிருப்பது குடிநீர் பிரச்னை, சாலை பிரச்னை. பெண்களுக்கான பாதுகாப்பையும் முக்கியத்துவத்தையும் அரசு கொடுக்க மறுத்து விட்டதாக பலர் வேதனை தெருவித்தனர். சர்வேயின் முடிவில், பொள்ளாச்சியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!