×

“சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி இலவச சிகிச்சை”… கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ரொனால்டோவின் மகத்தான உதவி!

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது. மொத்தமாக 120 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சீனாவை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தான். இதன் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்படைபவர்களின்
 

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது. மொத்தமாக 120 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.  சீனாவை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகள் தான். 

இதன் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் போதிய மருத்துவ வசதி இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டில் உள்ள தனது ஹோட்டலை கொரோனா பாதிப்படைந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையாக மாற்றவும், அதற்கான மருந்துகள், பணியாளர்களுக்குச் சம்பளம் என அனைத்து செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். உலகமே கொரோனவால் முடங்கியுள்ள நிலையில் ரொனால்டோ இவ்வாறு அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவருக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.