×

’பிரதமரே பதவி விலகு’ மெரினா போல ’மொபைல் லைட்’ தாய்லாந்தில் போராட்டம்

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டக் களத்தில் குதித்தவண்ணம் உள்ளனர். 2014 ஆண்டில் அதிரடி நடவடிக்கை மூலம் ஆட்சியைப் பிடித்தவர் அப்போதைய தளபதியாக இருந்த பிரயுத் சன் ஒச்சா. அவர் மீதான வெறுப்பும், கோபமும் தாய்லாந்து மக்களிடம் எப்பவும் இருந்து வந்தது. இந்நிலையில் 2019 ஆம் தாய்லாந்தில் தேர்தல் நடந்தது. அதில் பிரயுத் சன் ஒச்சா பிரதமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
 

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டக் களத்தில் குதித்தவண்ணம் உள்ளனர்.

2014 ஆண்டில் அதிரடி நடவடிக்கை மூலம் ஆட்சியைப் பிடித்தவர் அப்போதைய தளபதியாக இருந்த பிரயுத் சன் ஒச்சா. அவர் மீதான வெறுப்பும், கோபமும் தாய்லாந்து மக்களிடம் எப்பவும் இருந்து வந்தது. இந்நிலையில் 2019 ஆம் தாய்லாந்தில் தேர்தல் நடந்தது. அதில் பிரயுத் சன் ஒச்சா பிரதமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டன.

இவையெற்றால் கொஞ்சமும் அக்கறைக்கொள்ளாமல் தாய்லாந்து மன்னர் வெளிநாட்டில் உல்லாசமாகப் பொழுதைப் போக்கினார். இவையெல்லாம் மக்களின் கோபத்தைக் கொதிக்க வைத்தது. இந்தக் கொடூரத்திற்கு எதிராக திரண்ட ஜனநாயகத் தலைவர்களை ஆளும் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதில் பெண் செயற்பாட்டாளர் பனுசாயாவும் அடக்கம்.

போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்ய நாட்டில் உடனடியாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இதனால், நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் பொது இடங்களில் கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இதெல்லாம் போராட்டக்காரர்களை துளியும் கட்டுபடுத்த முடியவில்லை. பிரதமரே பதவி விலகு எனும் கோஷம் வலுவாக்கிகொண்டிருக்கிறது.

நேற்றும் கொட்டும் மழையில் நனைய, நனையை போராட்டத்தை முன்னெடுத்தனர் தாய்லாந்து மக்கள். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த பெரும் போராட்டத்தில் மொபைல் டார்ச் லைட்டை ஒளிரச் செய்து கனவம் ஈர்த்ததுபோல, தாய்லாந்திலும் செய்துள்ளனர். அந்தப் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் தாய்லாந்து போராட்டத்திற்கு ஆதரவாக ஹேஷ்டேக் மூலம் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த நெருக்கடியை தாய்லாந்து அரசு அதிகாரம் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது. இதேபோன்ற ஒரு போராட்டத்தை கிர்கிஸ்தான் மக்கள் முன்னெடுத்தபோது அந்நாட்டு பிரதமர் பதவி விலகினார். அதேபோல தாய்லாந்திலும் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.