×

ஹெச்ஐவிக்கு பயன்படுத்தும் மருந்தையே கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் – சீனா

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு இதுவரை 178 பேர் பலியாகி உள்ளனர். இதில் 63 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 19 சதவீதம்தான். ஆனால் உயிர்பலியில் மூத்த குடிமக்கள்தான் அதிகளவில் உள்ளனர் இந்நிலையில் ஹெச்ஐவிக்கு பயன்படுத்தும் மருந்து , கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் பலனளித்ததாக வூஹானை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வுஹானில் உள்ள
 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு இதுவரை 178 பேர் பலியாகி உள்ளனர். இதில் 63 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 19 சதவீதம்தான். ஆனால் உயிர்பலியில் மூத்த குடிமக்கள்தான் அதிகளவில் உள்ளனர்

இந்நிலையில் ஹெச்ஐவிக்கு பயன்படுத்தும் மருந்து , கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் பலனளித்ததாக வூஹானை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வுஹானில் உள்ள ஜின்யிண்டான் மருத்துவமனை, முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை. இதன் தலைமை மருத்துவரான ஸாங் , நோயாளிகளுக்கு Kaletra என்றழைக்கப்படும் ஹெச்ஐவி மருந்தினை கொடுத்ததாகவும் அது நல்ல பலனை தந்ததாகவும் கூறியுள்ளார். முதல்கட்டமாக மருத்துவர்கள் மூவருக்கு இந்த மருந்தினை கொடுத்த போது அவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஷாங்காய் நகர மருத்துவர்களும் Kaletra ஹெச் ஐ வி மருந்துடன், சீனா பாரம்பரிய மருத்துவத்தை அளித்த போது நல்ல பலனை கண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஹெச் ஐ வி மருந்துகள் பலனளிக்கவில்லை என நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.