×

ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை – ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா: ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இளவரசர் ஹாரி குடும்பத்தைவிட்டு வெளியேறுவதால் அரச குடும்பத்தில் உள்ள அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வடஅமெரிக்காவில் சுதந்திரமாக வாழ விரும்புவதாக ஹாரி-மேகன் தம்பதியினர்
 

ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா: ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இளவரசர் ஹாரி குடும்பத்தைவிட்டு வெளியேறுவதால் அரச குடும்பத்தில் உள்ள அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வடஅமெரிக்காவில் சுதந்திரமாக வாழ விரும்புவதாக ஹாரி-மேகன் தம்பதியினர் விளக்கம் அளித்திருந்தனர். இவர்களது விருப்பத்துக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம் என்றும் ராணி கூறியுள்ளார்.

பொதுவாகவே இளவரசர் ஹாரி ஊடக வெளிச்சத்தை விரும்பாதவர். தன்னுடைய சிறுவயதிலிருந்தே அவருக்கு ஊடகங்கள் என்றால் அலர்ஜி எனலாம். ஏனெனில் தன் செயல்களும் தன் குடும்பம் தொடர்பாக விஷயங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் அதீத கவனமே இதற்கான காரணமாகும். அதுமட்டுமின்றி தற்போது இவர் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கு மீடியாக்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹாரியும் மேகனும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர். தன்னுடைய மனைவி மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சியுடன் அங்கு தான் ஹாரி வசித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக ஹாரி இங்கிலாந்தில் இருந்தார். இதையடுத்து கனடா திரும்பிய அவரது புகைப்படங்கள் இங்கிலாந்து ஊடகங்களின் அட்டைப்படங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேகன் மற்றும் ஆர்ச்சி தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் இளவரசர் ஹாரி கடும் அதிருப்தி கொண்டுள்ளார். ஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்து சென்று ஒளிந்திருந்து ஊடக நிருபர்கள் புகைப்படம் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மேகன் மற்றும் ஹாரியின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹாரியின் வழக்கறிஞர்கள் இங்கிலாந்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.