×

ஹாரி- மேகனுக்கு மகாராணி அவசர அழைப்பு!

பிரிட்டன் அரச குடும்பத்தின் ஓவ்வொரு அசைவுகளும் ஊடகத்தால் உற்றுநோக்கப்படும். அந்த அரச குடும்பத்தில் 6 ஆவது அரியணை வாரிசான இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரிட்டன் அரச குடும்பத்தின் ஓவ்வொரு அசைவுகளும் ஊடகத்தால் உற்றுநோக்கப்படும். அந்த அரச குடும்பத்தில் 6 ஆவது அரியணை வாரிசான இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த மே மாதம் ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை பிறந்தது.
 

பிரிட்டன் அரச குடும்பத்தின் ஓவ்வொரு அசைவுகளும் ஊடகத்தால் உற்றுநோக்கப்படும். அந்த அரச குடும்பத்தில் 6 ஆவது அரியணை வாரிசான இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் ஓவ்வொரு அசைவுகளும் ஊடகத்தால் உற்றுநோக்கப்படும். அந்த அரச குடும்பத்தில் 6 ஆவது அரியணை வாரிசான இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த மே மாதம் ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அரச குடும்பத்தின் கடந்த சில நாட்களாகவே பற்று இல்லாமல் இருந்த சூழலில் அரசகுடும்பத்தின் உயர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் பதவியும் சொத்துக்களும் தங்களுக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

அமெரிக்கா சென்று வசிக்கவிருப்பதாகவும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருமான ஈட்டவிருப்பதாகவும் அறிவித்தனர். தற்போது கனடாவில் உள்ள இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டது பிரிட்டன் அரச குடும்பத்தினரை மட்டுமின்றி, உலக நாட்டு தலைவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஹாரி மீது அதிகம் பாசம் கொண்ட ராணி, குடும்பத்தினரிடம் கேட்காமல் இத்தகைய முடிவை வெளியிட்டதால் அதிருப்தியில் இருக்கிறார்.

இந்நிலையில் நாளைக்குள் சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்கு வருமாறு இளவரசர்கள் ஹாரி, வில்லியம் மற்றும் அவர்களது தந்தை சார்லஸ் ஆகியோருக்கு மகாராணி எலிசபெத் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.  அப்போது ஹாரி, மேகன் அரச பொறுப்புகளிலிருந்து விலகுவது தொடர்பான முடிவுகள் குறித்து கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.