×

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை சுட்ட போலீஸ் – வெளியான திடுக்கிடும் வீடியோ..!

ஹாங்காங்கில் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஹாங்காங் நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கடந்த நான்கு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுயன் வான் பகுதியில் கல்லூரி மாணவர்கள் கருப்பு உடை அணிந்து கருப்புக் கொடிகள் காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 

ஹாங்காங்கில் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஹாங்காங் நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கடந்த நான்கு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுயன் வான் பகுதியில் கல்லூரி மாணவர்கள் கருப்பு உடை அணிந்து கருப்புக் கொடிகள் காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

சீனாவின் தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக ஹாங்காங்கில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டு சீனாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனை எதிர்த்து மேலும் போராட்டம் வெடித்தது. கல்லூரி மாணவர்களையும் மக்களையும் களையச் செய்வதற்காக போலீசார் தடியடி நடத்தினர். தண்ணீர் பாய்ச்சியும் வெடிகுண்டுகளை வீசியும் விரட்டி அடிக்கப்பட்டது. 

இதில் சில மாணவர்கள் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இதனால் மாணவரை காவலர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மாணவர் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அருகிலிருந்த மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவெற்றியுள்ளார்.

இதனை பார்த்த பலர் இந்த வீடியோ பதிவு நெஞ்சை பதைபதைக்க வைத்ததாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைந்து கொண்டே இருப்பதாகவும் கமெண்ட் செய்தனர். மேலும் மாணவருக்கு இத்தகைய கொடும் செயலை செய்த காவலரை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதற்கு பதிலளித்த காவல்துறை, மாணவரின் தாக்குதலுக்கு தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தவறுதலாக நெஞ்சில் பாய்ந்து மாணவர் உயிரிழந்ததாகவும் கூறியது. 

தற்போது நியாயத்திற்காக கல்லூரி மாணவர்கள் மேலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.