×

ஹசாரா இன மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு; பாக்.,-கில் 16 பேர் பலி!

ஆப்கானிஸ்தனில் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக அங்கிருந்து வெளியேறி அவர்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவெட்டாவில் ஹசாரா இன மக்கள் வசித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தனில் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக அங்கிருந்து வெளியேறி அவர்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், குவெட்டாவில் உள்ள ஹசார்கஞ்சி சந்தையில், ஹசாரா இன மக்களை குறி
 

ஆப்கானிஸ்தனில் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக அங்கிருந்து வெளியேறி அவர்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவெட்டாவில் ஹசாரா இன மக்கள் வசித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தனில் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக அங்கிருந்து வெளியேறி அவர்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குவெட்டாவில் உள்ள ஹசார்கஞ்சி சந்தையில், ஹசாரா இன மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் குறித்து காவல்துறையினர் கூறுகையில், உருளைக்கிழங்குகள் நிறைந்த சாக்கு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வெடிகுண்டுகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதா அல்லது, டைம் பாம் போன்றதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 8 பேர் ஹசாரா இனத்தை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஹசாரா இன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாலும், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலும், ஹசாரா கடைக்காரர்கள், ஹசார்கஞ்சி சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களை மொத்தமாக வாங்கி அவர்கள் பகுதியில் விற்க பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிபரை சிறை பிடித்தது ராணுவம்!