×

ஷார்ஜா அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் Abbco Tower என்ற கட்டடம் உள்ளது. இதில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக உள்ள இந்த கட்டடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு
 

 தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  ஷார்ஜாவின் Al Nahda பகுதியில்  Abbco Tower என்ற கட்டடம் உள்ளது.  இதில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக  உள்ள இந்த கட்டடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் 9 பேருக்கு மட்டும் சின்ன சின்ன  காயங்கள் ஏற்பட்டிருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தளவு சேதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக  வெளியாகவில்லை. 

நகரத்திற்கு நடுவே உள்ள இந்த உயர்ந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.