×

வெட்டுக்கிளியால் அவதியுறும் பாகிஸ்தான் – அவசர நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லாகூர்: பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு தற்போது இந்தியாவை காட்டிலும் முதன்மையான எதிரியாக வெட்டுக்கிளிகள் மாறியுள்ளன. இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து வருகின்றன. வயல்வெளிகளையும் வெட்டுக்கிளிகள் விட்டு வைக்கவில்லை. இதனால் கால்நடைகளுக்கு
 

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்: பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்கு தற்போது இந்தியாவை காட்டிலும் முதன்மையான எதிரியாக வெட்டுக்கிளிகள் மாறியுள்ளன. இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து வருகின்றன. வயல்வெளிகளையும் வெட்டுக்கிளிகள் விட்டு வைக்கவில்லை. இதனால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாறியதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகி இருப்பதாக தெரிகிறது.

இதனால் பாகிஸ்தானில் வரலாறு காணாத கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. உணவுப் பொருட்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.