×

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை!

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியிட்டது லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டது. அதேசமயம், ஸ்வீடன்
 

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியிட்டது

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டது.

அதேசமயம், ஸ்வீடன் நாட்டில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அசாஞ்சே மீது புகார் எழுந்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார். அவர் மீதான பாலியல் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், ஜாமின் பெற்று தொடர்ந்து தூதரகத்திலேயே அவர் தங்கி வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக தூதரகத்தில் இருந்தவாறு சமூக வலைத்தளத்தில் தனது கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இதனால், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் அவர் சந்தித்தார்.

இதனிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்த அந்நாடு, அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றது. இந்த நிலையில், கடந்த மாதம் ஜாமின் நிபந்தனைகளை மீறியதாக லண்டனின் உள்ள சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது வழக்கு தொடரப்பட்டது.

இதன் பேரில், பிரிட்டிஷ் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.