×

வந்த வேகத்தில் கடலில் இறங்கிய விமானம்! பயணிகளின் நிலை என்ன?

ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கிய விமானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலிக்கிர்: ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கிய விமானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அருகே 600 தீவுகளை உள்ளடக்கிய சிறிய நாடு மைக்ரோனேசியா ஆகும். அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஃபோன்பெய்(Phonpei) நகரில் இருந்து பப்புவா நியூகினியாவின் போர்ட் மாரெஸ்பி(port moresby) நகருக்குப் புறப்பட்ட ஏர் நியுகினி (Air Niugini) விமானம் இடை நிறுத்தமான வினோ(Weno) தீவில் தரையிறங்க முயன்றது.
 

ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கிய விமானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலிக்கிர்: ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கிய விமானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா அருகே 600 தீவுகளை உள்ளடக்கிய சிறிய நாடு மைக்ரோனேசியா ஆகும். அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஃபோன்பெய்(Phonpei) நகரில் இருந்து பப்புவா நியூகினியாவின் போர்ட் மாரெஸ்பி(port moresby) நகருக்குப் புறப்பட்ட ஏர் நியுகினி (Air Niugini) விமானம் இடை நிறுத்தமான வினோ(Weno) தீவில் தரையிறங்க முயன்றது.

அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 160 மீட்டர் தூரம் சென்று கடலில் இறங்கியுள்ளது. ஆனால், இந்த விமானத்தில் பயணம் செய்த 35 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 9 பேர் மட்டுமே காயமடைந்ததாகவும் ஏர் நியுகினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க வீரர்கள் இன்று நடத்திய நீர் மூழ்கி ஆய்வில், விமானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இறந்தவர் யார் என கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்திற்கான காரணங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.