×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியுலகிற்கு தலைக்காட்டதற்கு இதுவே காரணம்… வெளியான பகீர் தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றும் கொரோனா அச்சம் காரணமாகவே தனிமையில் இருந்தார் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேலாக வெளியுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி வடகொரியா நிறுவனரும், கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவிலும், கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது
 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றும் கொரோனா அச்சம் காரணமாகவே தனிமையில் இருந்தார் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேலாக வெளியுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி வடகொரியா நிறுவனரும், கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவிலும், கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நடைபயிற்சி மேற்கொண்டபோது உடல் நலக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. மேலும், அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக பேசப்பட்டது. 

 

ஆனால், அனைத்து வதந்திகளையும் உடைத்து விட்டு, அண்மையில் வடகொரியாவில் நடந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பயந்தே, 20 நாட்களுக்கு மேலாக அவர் வெளியுலகில் நடமாடவில்லை என தென்கொரிய உளவு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இருந்தபடியே அரசு வேலைகளை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததையும் அந்த உளவு நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.