×

மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ்; மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு வீடியோ

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேலாடையின்றி வீடியோ ஒன்றை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நியூயார்க்: பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேலாடையின்றி வீடியோ ஒன்றை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஐ டச் மைசெல்ஃப்” என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த படலை எழுதி பாடிய டிவினில்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண், கடந்த 5
 

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேலாடையின்றி வீடியோ ஒன்றை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

நியூயார்க்: பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேலாடையின்றி வீடியோ ஒன்றை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஐ டச் மைசெல்ஃப்” என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த படலை எழுதி பாடிய டிவினில்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் தனது 53-வது வயதில் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், தி டிவினில்ஸ் பாடலை அடிப்படையாக கொண்டு “ஐ டச் மைசெல்ஃப்” என்ற பாடல் வரிகளை பாடி, தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து, மார்பகப்புற்றுநோய் குறித்து டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விழிப்பணர்வு ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செரீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து செரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது மார்பகப்புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதம். உலகளவில் பிரபலமான தி டிவினில்ஸ் பாடலை பதிவு செய்து உங்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். இந்த பாடல் மூலம் பெண்கள் நாள்தோறும் தங்கள் மார்பகங்களைத் தொட்டுப்பார்த்து மார்பகப்புற்றுநோய் அறிகுறிகளை அறியலாம். ஐ டச் மைசெல்ஃப் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மார்கப்புற்றுநோயால் உயிரிழந்த புகழ்பெற்ற திவா, கிறிஸி ஆம்ப்லெட் ஆகியோரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல் நலத்தை வலியுறுத்தி பல்வேறு பாடல்களை பாடிய இவர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.