×

மேயர் பதவியையே ஏலம் எடுத்த 7 மாதக் குழந்தை; அதிர்ச்சியில் நம்மூர் ஊராட்சித் தலைவர் வேட்பாளர்கள் !

அமெரிக்காவில் மேயர் பதவியை 7 மாதக் குழந்தை ஏலம் எடுத்த ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தக் குழந்தையுடன் செல்ஃபி எடுத்து ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் பல இடங்களில் இன்னும் தலைவர்கள் ஏலம் முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர் முதலிலேயே ஒரு கிராமத்திற்கு இவ்வளவு பணம் தருவேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அமெரிக்காவில் மேயர் பதவியை 7 மாதக் குழந்தை
 
அமெரிக்காவில் மேயர் பதவியை 7 மாதக் குழந்தை ஏலம் எடுத்த ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தக் குழந்தையுடன் செல்ஃபி எடுத்து ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் பல இடங்களில் இன்னும் தலைவர்கள் ஏலம் முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர் முதலிலேயே ஒரு கிராமத்திற்கு இவ்வளவு பணம் தருவேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும்.

அதேபோல்தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணம் வைட்ஹால் பகுதியில் உள்ள தீயணைப்பு துறை தன்னார்வர்களுக்கு நிதி திரட்ட மேயர் பதவி ஏலம் விடுவார்கள். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏலத்தில்,  மேயர் பதவியை சார்லி என்ற ஏழு மாத குழந்தை அதிக விலைக்கு ஏலம் எடுத்து வெற்றிபெற்றது. 

குழந்தை சார்பாக அவரது தந்தை ஏலம் எடுத்தார். இதையடுத்து அந்த குழந்தை கடந்த ஞாயிறன்று மேயர் பதவியை மகுடம் சூட்டிக்கொண்டது. இந்த பதவியேற்பு விழாவில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு 7 மாத சுட்டி மேயருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னர்  குழந்தை மேயர் சார்லி சார்பாக அவரின் தந்தை வில்லியம் பேசினார். ‘நான் சார்லி மேயர் பதவியை என் திறமைக்கு ஏற்றவாறு செய்வேன் என உறுதி தருகிறேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் அன்பாக இருப்பேன். தீயணைப்புத்துறை தன்னார்வலருக்கு, பிஸ்கேட் எடுத்துச் செல்வேன். எனவே எனக்கு அம்மாவும், அப்பாவும் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” அமெரிக்காவின் இளம் வயதில் மேயரான சார்லி குழந்தையுடன் பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்கின்றனர். இதைக் கேட்ட நம்மூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் எடுத்த வேட்பாளர்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து போய் உள்ளனர்.