×

முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!

இருந்த கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். அதன்மூலம் நாட்டின் அரசமைப்பு சட்டம் முடக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரஃப். இவர் அதிபராக இருந்த கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். அதன்மூலம் நாட்டின்
 

இருந்த கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். அதன்மூலம் நாட்டின் அரசமைப்பு சட்டம் முடக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரஃப். இவர் அதிபராக இருந்த கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். அதன்மூலம் நாட்டின் அரசமைப்பு சட்டம் முடக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு புதிய அதிபராகப் பதவியேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தலைமையிலான  அரசு முஷாரஃப் மீது  தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை பாகிஸ்தான் பெஷாவ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் முன்னாள் அதிபர் முஷாரஃப்க்கு மரண  தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. 

76 வயதான முஷாரஃப்  தற்போது உடல்நலக் குறைவால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.