×

மாஸ்கோ அனல்மின் நிலைய எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் செயல்பட்டுவரும் அனல் மின்நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் செயல்பட்டுவரும் அனல் மின்நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்நிலையத்திற்குள் வரும் எரிவாயு குழாய் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே இதற்குக் காரணம் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மின் நிலையத்திலிருந்து எழும்பும்
 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் செயல்பட்டுவரும் அனல் மின்நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் செயல்பட்டுவரும் அனல் மின்நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்நிலையத்திற்குள் வரும் எரிவாயு குழாய் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே இதற்குக் காரணம் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மின் நிலையத்திலிருந்து எழும்பும் தீ சுவாலைகளும் புகையும் நெடுஞ்சாலைகளில் செல்வோரை பயமுறுத்தும் அளவுக்கு உள்ளன.

தீவிபத்து ஏற்பட்டவுடன், உடனடி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அவசரகால அமைச்சகம் துரிதப்படுத்தியதால், பெரியளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதுடன், மாஸ்கோ நகருக்கான மின்வினியோகத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொண்டது. கடந்த 1992ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வரும் இந்த மின் நிலையத்தில் நாளொன்றுக்கு 1,066 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது.