×

மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாதா? – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது அருந்துவதால் கொரோனா வைரஸ் பரவாதா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது. ஜெனீவா: மது அருந்துவதால் கொரோனா வைரஸ் பரவாதா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில
 

மது அருந்துவதால் கொரோனா வைரஸ் பரவாதா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது.

ஜெனீவா: மது அருந்துவதால் கொரோனா வைரஸ் பரவாதா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்பாக இருக்க அல்லது கொரோனா வைரஸை அழிக்க மது அருந்துவது உதவும் என சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக தகவல்கள் வைரலாக பரவியது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான வழிக்காட்டுதல் இல்லாமல் இந்த மாதிரி செயல்களை செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.