×

பிளாஸ்டிக் புட்டிக்கு இலவச டிக்கெட் ! இத்தாலியில் அறிமுகம் !

இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கா உலகின் பல பகுதிகளில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்தப்படியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்து சுற்றுச்சூழலையும் இந்த பூமியையும் காப்பாற்ற பல நாடுகள் உறுதி
 

இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கா உலகின் பல பகுதிகளில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்தப்படியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்து சுற்றுச்சூழலையும் இந்த பூமியையும் காப்பாற்ற பல நாடுகள் உறுதி பூண்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை கெண்டு செல்ல இத்தாலி அரசு புதிய விஷயத்தை கையாண்டுள்ளது. அதவாது பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு வந்து ரயில் நிலையத்தில் உள்ள இயந்திரத்தில் போட்டால், அது அந்த பிளாஸ்டிக் பாட்டிலை சுக்கு நூறாக்கி ஒரு ரயில் டிக்கெட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடைமுறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை போன்ற நகரங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் வரவேற்பு அளிப்பர். ஆனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 40 ரூபாய் தேவைப்படுகிறது. 10 ரூபாய் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்துவிட்டு ரயில் நிலையங்களில் உள்ள இயந்திரத்தில் போட்டு 30 ரூபாய் மிச்சப்படுத்தவது வாடிக்கையாகி போய்விடுமோ என்ற கவலை எழுகிறது.