×

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஏழு நாட்கள் தனது டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் சுயமாக தனிமையில் இருந்ததாகவும் மார்ச் 27 அன்று அறிவித்தார். அவர் ஒரு வாரத்தில் குணமடைந்து வெள்ளிக்கிழமை மீண்டும் வெளிவர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லண்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஏழு நாட்கள் தனது டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் சுயமாக தனிமையில் இருந்ததாகவும் மார்ச் 27 அன்று அறிவித்தார். அவர் ஒரு வாரத்தில் குணமடைந்து வெள்ளிக்கிழமை மீண்டும் வெளிவர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் அதிக காய்ச்சல் தொடர்வதால் அவர் வீட்டிலேயே இருப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிப்பது அவசரநிலை அல்ல. அவரது கொரோனா அறிகுறிகளின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான உலகத் தலைவராக ஜான்சன் உள்ளார். அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஒரு வாரமாக கொரோனா அறிகுறிகளால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் இப்போது குணமடைந்து வருகிறார்.