×

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 24, 872ஆக
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 24, 872ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 49, 359 ஆக உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சத்து 28  ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் 3 ஆயிரத்து 292 பேரும், இத்தாலியில் 8 ஆயிரத்து 215பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 1304 பேரும், ஸ்பெயினில் 4 ஆயிரத்து 858 பேரும் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா வைரஸால் 11 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 578 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா இருப்பதை அவரே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இளவரசர் சார்லஸுக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.